உள்ளூர் செய்திகள்

உலக புத்தொழில் மாநாடு நிறைவு

கோவை: கோவையில் நேற்று தொடங்கிய உலக புத்தொழில் மாநாடு இன்று நிறைவு பெற்றது. தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு 2025 மாநிலத்தின் புதுமை வளர்ச்சியில் முக்கிய நிகழ்வாக அமைந்தது. 45 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 328 சர்வதேச பேச்சாளர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி யூனிகார்ன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு, 609 பேச்சாளர்களை ஒரே மேடையில் இணைத்து, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்கியது.ஸ்கேல்-அப் கிராண்ட் திட்டத்தின் கீழ் 22 தொடக்க நிலை தொழில் வளர் மையங்கள் மற்றும் 15 தொழில் வளர் மையங்களுக்கு அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன. ஸ்டார்ட்-அப் டி.என் வென்சர் பில்டர் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கும் அனுமதி ஆணைகள் வழங்கி, 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் புதிய நிறுவனங்கள் உருவாகும் செயல்முறைகள் விரைவுபடுத்தப்பட்டன. மாநாட்டில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, கனடா போன்ற முக்கிய நிறுவனங்கள் இணைந்தன.மேலும், 750 புத்தொழில் நிறுவனங்களின் 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், 21 நாடுகளின் தனி அரங்குகள், 12 தனியார் நிறுவன அரங்குகள் மற்றும் 8 புத்தொழில் திட்ட அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கூகுள், மெடா, போன்பே, ஜோஹோ போன்ற உலக நிறுவனங்கள் மற்றும் மாநில நிபுணர்கள் 11 பயிற்சிகளை நடத்தி, புத்தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர். 500 திட்ட விளக்க அமர்வுகளில் 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்று ரூ. 130 கோடி முதலீடுகளை உறுதி செய்தனர். சாம்சங், டெகத்லான், லோவ்'ஸ் இந்தியா, என்விடியா, போஷ், டைம்லர் ட்ரக் போன்ற நிறுவனங்களின் அமர்வுகள் பன்னாட்டு புதுமை, முதலீடு மற்றும் ஒத்துழைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்