உள்ளூர் செய்திகள்

மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் 6 நாட்கள் நடக்கும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தனர். துவக்க நாடகமாக ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா நாடகம் நடத்தப்பட்டது. தினமும் வெவ்வேறு தலைப்புகளில் ஜன.10 வரை காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை நாடகங்கள் நடைபெறும்.சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு, ஆங்கில துறைத் தலைவர் தனலட்சுமி, பேராசிரியர்கள் ஜோசப் பால் ஸ்பெசலீல், சரோஜா ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்