உள்ளூர் செய்திகள்

எச்சரிக்கையுடன் இருங்கள் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை

எரியோடு: "கெட்ட விஷயங்களுக்குள் எளிதில் சிக்கிவிடும் ஆபத்து அதிகம் உள்ளதால் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசினார்.எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய அவர் பேசியதாவது: எவ்வளவோ நல்ல, கெட்ட விஷயங்கள் அதிகளவில் மாணவர்களை சுற்றியும், நெருங்கியும் உலா வருகின்றன. அன்ன பறவை எப்படி தனக்கு தேவையானதை மட்டும் எடுத்து கொண்டு மற்றவற்றை உடனே வெளியேற்றுவதை போல் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்விக்காக அரசு வழங்கும் எல்லா உதவிகளை பயன்படுத்தி உயர்ந்த பதவிகளை பெற்று வாழ்வில் உயர்வதுடன், உங்கள் குடும்பம், தெரு, ஊர், மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இதை உறுதிமொழியாக இன்று ஏற்க வேண்டும் என்றார்.பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நிர்மலா, தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, ரவிசங்கர், கார்த்திகேயன், செந்தில்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்