பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
செங்கல்பட்டு: பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 18, 20 ஆகிய தேதிகளில், பேச்சு போட்டிகள் நடக்கின்றன.தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, வரும் 18ம் தேதியும், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, வரும் 20ம் தேதி காலை 9:00 மணியளவிலும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரியில் பேச்சுப் போட்டி நடக்கிறது.கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், கல்லுாரிக்கு இரண்டு பேர் வீதம், அந்தந்த கல்லுாரிகளின் முதல்வரே தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.