உள்ளூர் செய்திகள்

கோடை விளையாட்டு இலவச பயிற்சி முகாம்

கோவை: அண்ணா பல்கலை மண்டல மைய வளாகத்தில் மூன்றாவது இலவச கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது. மே 1 முதல் 18ம் தேதி வரை தினமும் காலை 06:00 முதல் 08:30 மணி வரை நடக்கும் முகாமில் கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், கபடி, யோகா ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், 12 முதல் 18 வயதுடைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். ஆர்வம் உள்ளவர்கள் பல்கலை மண்டல மைய உடற்கல்வி துறை அலுவலகத்தில் தொடர்புகொள்ளலாம். அல்லது 94422 66815; 86376 61542; 88384 58075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.முன்பதிவு கட்டாயம். மாணவ, மாணவியர் விளையாட்டு உடை, தண்ணீர் பாட்டில் கொண்டு வர வேண்டும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்