உள்ளூர் செய்திகள்

சீர்மரபினருக்கு கல்வி உதவித்தொகை; விண்ணப்பிக்க அழைப்பு

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர், https://scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக, 75 ஆயிரமும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரையும் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அல்லது சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.கடந்த கல்வியாண்டில் (2025 - 26) 100 சதவீத தேர்ச்சி பெற்ற, மத்திய அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்றவர்கள், கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தங்களது விவரங்களை உறுதி செய்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.புதிதாக விண்ணப்பம் செய்யும் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, இணையதளம் மூலம் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை பெற, https://scholarships.gov.in அல்லது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் http://socialjustice.gov.in இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்