உள்ளூர் செய்திகள்

ஒவ்வொரு துளியும் முக்கியம் பள்ளியில் விழிப்புணர்வு

மசக்காளிபாளையம்: மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. வடகிழக்கு பருவமழையை சரியாக பயன்படுத்தாவிடில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது.பிரதான நீர்நிலைகள் தூர்வாரப்படவுள்ளன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.தலையில் குடம் ஏந்தி, தண்ணீரை சேகரிக்காவிடில் வரும்காலத்தில் ஒரு லிட்டர் ரூ.2,000 விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என விளக்கினர். மாதிரி மழைநீர் கட்டமைப்பு அமைத்து மாணவர்கள் அசத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்