அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோவை: கோவை அரசு கட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தஞ்சையில் உள்ள தனியார் பல்கலையில் பி.எல்., படிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நடத்த விண்ணப்பம் வழங்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது. இதை கண்டித்து, கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஜூலை 30ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தனியார் சட்டக்கல்லூரிக்கான மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 1,200 பேர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். கல்லூரி வளாகத்துக்குள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இரவு 250 மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர சட்டக்கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.