உள்ளூர் செய்திகள்

முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கான அமைப்பு துவக்கம்

முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலையங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜமாஅத்-இ-இஸ்லாமி ஹிந்த்(ஜே.ஐ.எச்), அந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் அடங்கிய ஒரு சங்கத்தை நிறுவியுள்ளது. இந்திய முஸ்லீம் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு என்று அழைக்கப்படும் இந்த சங்கம், நாட்டிலுள்ள முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு குடை அமைப்பு போன்று செயல்படும். முஸ்லீம் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வியை, நவீன கால வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்தவும், அவற்றை முறைப்படுத்தவும், சிறுபான்மையினர் கல்வி சம்பந்தமாக அரசு செயல்படுத்தும் பல நல திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டமைப்பானது மதரசாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நவீன கல்வி சம்பந்தமாக பயிற்சிகளை வழங்கும். நாடு முழுவதும் சுமார் 2000 என்.ஜி.ஓ -க்கள் நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இதில் ஏற்கனவே உறுப்பினர்களாக தங்களை பதிவுசெய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்