உயர் ஊதியம் பெறும் பி.ஐ.எம். மாணவர்கள்
திருச்சியில் உள்ள பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் (பி.ஐ.எம்.) 2011ஆம் ஆண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பல நல்ல நிறுவனங்களில் அதிக ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். பி.ஐ.எம். மாணவர்கள் மிக நல்ல பதவிகளில், அதிகபட்ச ஊதியத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 55 நிறுவனங்கள் வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வினை நடத்தியது. அதில் சுமார் 38 நிறுவனங்களில் உயர் பதவிகளில் 119 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 8.79 லட்ச ரூபாய் ஊதியத்துடன் கூடிய பணி வாய்ப்பினை எங்கள் கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர் என்று பி.ஐ.எம்.மின் வேலை வாய்ப்பு நிர்வாகி எம். ஷங்கரன் கூறினார்.