இணையதளம் மூலம் உதவும் பிரிட்டிஷ் கவுன்சில்
பிரிட்டிஷ் கவுன்சிலானது தனது வலைத்தளம் மூலம், ஆங்கிலம் கற்பதற்கு பலவகை உதவிகளை செய்கிறது. வினாடி-வினா அம்சங்கள், வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள் ஆகிய அம்சங்களைக் கொண்டு இந்த வலைத்தளம் மூலமாக மாணவர்கள் தங்களின் ஆங்கில இலக்கண அறிவு மற்றும் வார்த்தை வளத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. மேலும் இந்த வலைதளத்தில் உள்ள ஐ.இ.எல்.டி.எஸ். பிரிவானது, பிரிட்டனில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பலவித உதவிக்குறிப்புகளை வழங்குகிறது. மேலும், வணிகம் மற்றும் வேலை பிரிவானது, பணிபுரியும் இடங்களில் உபயோகப்படும் ஆங்கிலம் பற்றி கட்டுரைகள் மற்றும் பலவித உதவிக் குறிப்புகளை வழங்குகிறது. இந்த இணையதளத்திற்கான பதிவு இலவசம். இதன்மூலம் நீங்கள் எளிதாக கற்றுக்கொண்டு, இணையத்தின் மூலம் பிறரிடம் உரையாடவும் முடியும். இதைப்பற்றி மேலும் விவரங்கள் அறிய www.learnenglish.britishcouncil.org என்ற இணையதளம் செல்லவும்.