பிரதமர் விருது பரிந்துரை பிப்., 12 வரை அவகாசம்
புதுடில்லி: பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரதமர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்., 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள அரசு ஊழியர்கள் செய்த சிறப்பான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரித்து, பிரதமர் விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த, 2023ம் ஆண்டிற்கான இந்த விருதுகளை பெற விண்ணப்பிக்க, பரிந்துரை செய்வதற்கான இறுதி நாளாக ஜன., 31 அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளை பிப்., 12 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.