உள்ளூர் செய்திகள்

ஜெட் ஏர்வேஸ் அதிரடி ஆட்குறைப்பு: 1,900 பேர் பணி நீக்கம்

இதனால் பாதிக்கப்பட்ட விமானப் பணிப் பெண்கள் உட்பட ஊழியர்கள் அனைவரும், ‘ஜெட்’ அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விமான சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களான, ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ மற்றும் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆகியவை ஒன்றிணைவது என அறிவித்தன. தனியார் விமான போக்குவரத்தில் இரு நிறுவனங்களும் சேர்த்து சந்தையில் 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. தற்போது, விமான சேவையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இரு நிறுவனங்களும் இணைவதன் மூலம் ஆண்டுதோறும் 1,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும். இந்நிலையில், ஜெட் நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையாக, தன்னிடம் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் முதலில் 800  பேரை நீக்கியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. இவர்களுக்கு 30 நாள் சம்பளத்தை இழப்பீடாக வழங்குகிறது. அடுத்த சில நாட்களில் 1100 பேர் பதவி நீக்கம் செய்யப்படுவர். எல்லாத்துறையையும் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர். சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் விமான எரிபொருள் செலவு அதிகரித்தது போன்றவற்றால் நிர்வாக செலவை குறைக்க வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், ஜெட் ஏர்வேசில் பணிபுரியும் 11 ஆயிரம் பேர் வேலை ஸ்திரத்திற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறினர். வேலையிழந்த ஊழியர்கள் கூறுகையில், ‘எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் நிர்வாகம் திடீரென இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்றனர். மும்பையில் அந்தேரியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு நியாயம் கிடைக்க அரசியல் தலையீடு தேவை என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்