தேர்தல் முடியும் வரை பிளஸ் 2 வகுப்பு கட்
இந்நிலையில், பள்ளிகளை முழுமையாக, தேர்தல் துறையிடம் ஒப்படைக்க, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, புனித வெள்ளி என்பதால், ஏற்கனவே விடுமுறை நாளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நாளை, தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதை தொடர்ந்து, ஓட்டுச்சாவடிகள் உள்ள பள்ளிகள், ஞாயிறு, திங்கள் நாட்களில், தேர்தல் துறைவசம் வந்து விடும். எனவே, &'வரும், 7ம் தேதி வரை, பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்காது&' என, அறிவிக்கப்பட்டுள்ளது.