மாணவர்களுக்கு புகையிலை விற்ற 2 பேருக்கு காப்பு
சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் டவுன் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வீரய்யா தெருவில் முபினா, 40, என்பவர், புகையிலை பொருட்களை மாணவர்களுக்கு விற்றார். இதை பார்த்த போலீசார்,4,000 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்-தனர். அதேபோல் அதே பகுதியில் சலீன் பாஷா, 46, என்பவர், மொபட்டில் சிறுவர்களுக்கு விற்க வைத்திருந்த, 6,000 ரூபாய் மதிப்பில்புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவ-ரையும் கைது செய்தனர். மேலும், வீகோ மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.