உள்ளூர் செய்திகள்

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்: பிப்.,28 தூத்துக்குடி வருகிறார் மோடி

சென்னை: தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி 28 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் திறந்து வைக்க உள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்க்கொண்டுள்ள என் மண் என் யாத்திரை&' நிறைவு விழாவில் பங்கேற்க திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பிப்.,28 ல் தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் நடக்கும் குலசை ராக்கெட் ஏவுதுளத்திற்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் அன்றைய தினம் திறந்து வைக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்