உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 318 பேர் ஆப்சென்ட்

தர்மபுரி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 318 மாணவ மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர்.தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 94 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், 225 அரசு பள்ளிகள், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 21,330 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 21,012 பேர் மட்டும் தேர்வெழுத வந்திருந்தனர். இதில், 318 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர். மேலும், தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்