அரசு பள்ளிகளில் வசதிகள்: நவ., 4ல் சர்வே துவக்கம்
உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.,க் கள்) தங்கள் எல்லைக் குட்பட்ட பள்ளிகளில் வரும் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நேரடி ஆய்வு செய்து அறிக்கை தர தொடக்க கல்வித்துறை கூறியுள்ளது. ஆசிரியர்களின் பணியிட விவரம், வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை, தமிழ், ஆங்கில பாடத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு திறன், கட்டடங்களின் தரம், கூடுதல் கட்டடங்கள் தேவை விவரம், மின்சாரம், குடிநீர், சுற்றுச்சுவர் வசதி இருக்கிறதா என்ற விவரங்களை அறிக்கையில் தர வேண்டும். இதுதவிர மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவைக்கேற்ப கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதையும் அறிக்கையில் தனியாக தர ஆலோசனை தரப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பள்ளிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.