கற்பகம் மருத்துவ கல்லுாரி 7வது பட்டமளிப்பு விழா
கோவை: ஈச்சனாரி, கோவை கற்பகம் மருத்துவக் கல்லுாரியில், ஏழாவது பட்டமளிப்பு விழா, கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமையில் நடந்தது.சிறப்பு விருந்தினராக, தேசிய மருத்துவ அறிவியல் அகாடமி தலைவர் திகம்பர் பெஹாரா பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இளங்கலை மருத்துவத்தில், 138 பேரும் முதுகலை மருத்துவப் படிப்பில்,10 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.பல்கலை தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, கற்பகம் மருத்துவக் கல்லுாரி முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் நிர்மலா, ஆர்.எம்.ஓ., அருண், மருத்துவ இயக்குனர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.