உள்ளூர் செய்திகள்

வளம் கொழிக்கும் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் இன்றைய கால கட்டத்தில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் துறை பலராலும் விரும்பப்படுகிறது. நிட்டட், பாலியெஸ்டர், காட்டன், சில்க் என எத்தனை விதமான டெக்ஸ்டைல் வார்த்தைகளை நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். இவை அத்தனையையும் உருவாக்கும் தொழில் நுட்பம் தான் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங். இந்தியாவில் 3 கோடி பேருக்கு வேலை வாய்ப்பைத் தந்திருக்கும் துறை டெக்ஸ்டைல் தான். இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறிவிடுகிறது. இதனால் தான் உள்நாட்டிலும், ஏற்றுமதியிலும் டெக்ஸ்டைல் பொருட்கள் முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. சில ஆண்டுகளில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்கும் பேஷன் டெக்னாலஜியும் அதிகமாக பிரபலமடைந்து வருகின்றன. ஸ்பின்னிங், வீவிங், கார்மென்ட் மனுபாக்சரிங், டெக்ஸ்டைல் மெஷனரி மனுபாக்சரிங், விற்பனை மற்றும் சேவை, குவாலிடி கன்ட்ரோல் என டெக்ஸ்டைல் டெக்னாலஜி பல பிரிவுகளை கொண்டிருக்கிறது. இன்று இத்துறையின் எந்த பணிக்கும் கம்ப்யூட்டரின் பயன்பாடு இன்றியமையாததாகி விட்டது. உற்பத்தி மற்றும் டிசைனிங் இரண்டுக்குமே இது தேவைப்படுகிறது. இத்துறையில் பட்டப்படிப்பும் மேற்படிப்பும் தரப்படுகின்றன. டில்லி ஐ.ஐ.டி., இதில் ஒன்றரை ஆண்டு பட்ட மேற்படிப்பை தருகின்றன. பிளஸ் 2 முடித்த பின் நுழைவுத் தேர்வு மூலமாகவே பட்டப் படிப்புகளில் சேர முடியும். இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் டிசைன்ஸ், கெமிக்கல் பிராசசிங், மெஷின் டிசைன், டெக்ஸ்டைல் புராடக்ட் இன்ஜினியரிங் ஆகியவை இப்படிப்பில் உள்ள பாடங்கள். மேலும் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர்ஸ், அக்கவுன்டிங் போன்ற வற்றையும் படிக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் இப்படிப்பு முடிப்பவருக்கு தொடக்க சம்பளம், நிறுவனங்களைப் பொறுத்து மாதம் 8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை தரப்படுகிறது. நல்ல திறன் பெற்றிருப்பருக்கு தொடக்க சம்பளமே 20,000 ரூபாய் வரை தரப்படுகிறது. காட்டன் யார்ன் தயாரிக்கும் கழகங்கள், ஆய்வகங்கள், குவாலிடி கன்ட்ரோல், அக்ரோ டெக்ஸ்டைல், மெடிக்கல் டெக்ஸ்டைல் போன்றவற்றில் எண்ணற்ற டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் தேவைகள் இருக்கின்றன. பெரிய ஸ்பின்னிங் மில்களிலும் ஏராளமான தேவைகள் இருக் கின்றன. சுயமாக நிட்வேர் போன்றவற்றை தயாரிப்பதிலும் இப்படிப்பு முடிப்பவர்கள் ஈடுபடலாம். சைசிங் யூனிட், டெக்ஸ்டரிங் யூனிட், பிராசஸ் ஹவுஸ், பினிசிங் யூனிட் போன்றவற்றையும் சுயமாக தொடங்க முடியும். முக்கிய கல்வி நிறுவனங்கள்:Alagappa College Of Technology, Chennai IIT, New DelhiPSG College of Technology, CoimbatoreSasmira The Synthetic and Art Silk Mills’ Research Association, MumbaiTechnological Institute Of Textiles, HaryanaMS University Department of Technology and Engineering, BarodaLD College Of Engineering, Ahmedabad


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்