பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு தாசில்தார்
பள்ளி மாணவர்களுக்கு தாமதமின்றி சான்றுகள் வழங்கும் வகையில் சிறப்பு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் துவங்கியுள்ள நிலையில் உதவித்தொகை, அரசின் சலுகைகள் பெற பல்வேறு சான்றுகளுக்காக பள்ளி மாணவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு அதிகளவில் வருகின்றனர். சான்றுகள் பெற அதிகளவில் மாணவர்கள் வரும் தாலுகா அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, அங்கு மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க சிறப்பு துணை தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளி, கல்லூரி சீசன் முடியும் வரை பணியில் இருப்பார்கள். இரண்டு மாதங்கள் வரை இச்சிறப்பு பணியில் செயல்படுவார்கள். மேலும் தேவைப்பட்டால் ஒரு மாதத்திற்கு கால நீட்டிப்பு செய்யப்பட உள்ளனர்.