பொறியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி
மேற்கு தாம்பரம்: பொறியியல் கல்லூரி விளையாட்டு போட்டிகளில், பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி சார்பில், 35வது, ’சாய் ராம் டைஸ் 2015’ பொறியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பெண்கள் பிரிவு போட்டிகள் நிறைவடைந்தன. அதில், 532 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி போட்டிகளில், மேஜைபந்தில் செயின்ட் ஜோசப் கல்லூரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், எஸ்.எஸ்.என்., கல்லூரி அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது. அதில், செயின்ட் ஜோசப் கல்லூரி அணிக்கு, 10 புள்ளிகள் கிடைத்தன. சதுரங்கத்தில், செயின்ட் ஜோசப் கல்லூரி அணி, 4-0 என்ற புள்ளிக்கணக்கில், மதுரை தியாகராஜா கல்லூரி அணியை வீழ்த்தியது. அதில், செயின்ட், ஜோசப்புக்கு 10 புள்ளிகள் கிடைத்தன. கபடி, வாலிபாலில் இரண்டாம் இடம் பிடித்து, தலா ஆறு புள்ளிகள் பெற்றது. கூடைபந்து, இறகுபந்து போட்டிகளில், மூன்றாம் இடத்தை பிடித்து, தலா இரண்டு புள்ளிகள் பெற்றது. இந்த போட்டிகளில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி, 38 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை, எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியும், மூன்றாம் இடத்தை பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியும் பெற்றன.