உள்ளூர் செய்திகள்

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று (23ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும், விருதுநகர், திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்