செல்லிப்பட்டு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுச்சேரி: செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் மற்றும் கைவினை கண்காட்சி நடந்தது. ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். தலைமையாசிரியர் வாசு தலைமை தாங்கினார். அங்காளன் எம்.எல்.ஏ., கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவி அஞ்சாலாட்சி, உறுப்பினர் வெங்கடேஸ்வரன், வளர்ச்சிக் குழு உறுப்பினர் பச்சையம்மாள் வாழ்த்தி பேசினர். பிள்ளையார்குப்பம் அரசு பள்ளி ஆசிரியர் ஜெயபாரதி, கண்காட்சியில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார். ஆசிரியை பரிமளா நன்றி கூறினார்.