ஆசிரியர்களுக்கு பாடபொருட்கள் சார்ந்த பயிற்சி
ராசிபுரம்: எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பாடப்பொருட்கள் சார்ந்த பயிற்சி, ஐந்து நாட்கள் நடந்தது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜவேல் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) பூங்கொடி துவக்கி வைத்தார். பயிற்சியில், பள்ளியில் பயிலும் பல்வேறு வகையான மாற்றுத்திறன் மாணவர்கள் பற்றியும், அவர்களுக்கு கற்பிக்கும் முறைகள், கையாளும் உதவி உபகரணங்கள், மாற்றுத் திறனுக்கு தகுந்த வகையில் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் உருவாக்குவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பாசிரியர்கள் சரோஜா, பெரியசாமி, மணிமாதேஸ், கமலா, ஆசிரியர்கள் வைரமணி, செந்தில்வெங்கடாஜலம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 39 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.