உள்ளூர் செய்திகள்

தெலுங்கானா; பல்கலை மாணவர்கள் கைது

தெலுங்கானா மாநிலம், உஸ்மானியா பல்கலையில், தடையை மீறி, மாட்டிறைச்சி திருவிழா நடத்த முயன்ற, பல்கலை மாணவர்கள், 16 பேர் கைது செய்யப்பட்டனர்.ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலை மாணவர்கள், பல்கலை விடுதியில், மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்கு, ஐதராபாத் கோர்ட் தடை விதித்தது. இந்நிலையில், சில மாணவர்கள், தடையை மீறி, பல்கலை விடுதியில், நேற்று மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்போவதாக அறிவித்தனர். மாணவர்களின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பினர் பல்கலை வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அதே போல், பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ராஜா சிங்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பல்கலை மாணவர்கள், 16 பேர் மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, எம்.எல்.ஏ., ராஜா சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்