தூங்கிய மாணவர் பள்ளிக்குள் தவிப்பு
தேனி: தேனி அருகே கைலாசபட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளியிலேயே தூங்கி விட்டார். அவர் தூங்கியது தெரியாமல் மாலையில் வகுப்பறையை மூடி விட்டுச் சென்று விட்டனர். மாணவர் வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளியில் வந்து தேடினர். அப்போது மாணவர் வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வகுப்பறையை திறந்து, மாணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.