உள்ளூர் செய்திகள்

கிறிஸ்ட் கல்லூரி ஆண்டு விழா

புதுச்சேரி: பத்துக்கண்ணு கிறிஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக, நடன இயக்குனர் காயத்ரிரகுராம் கலந்து கொண்டு, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லுாரி தாளாளர் பால் தலைமை தாங்கி, கல்வி மற்றும் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் சிறந்துவிளங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பரிசுகளை வழங்கினார். கல்லுாரி இயக்குனர் ரவிச்சந்திரன் கல்லுாரி மற்றும் மாணவர்களின் சாதனைகளை விளக்கி கூறினார். விழாவில் முதல்வர் நக்கீரன் வரவேற்றார். டாக்டர் திருமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்