உள்ளூர் செய்திகள்

தினமலர் வழிகாட்டி திண்டுக்கல்லில் துவங்கியது!

திண்டுக்கல்: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர் கல்வியை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே.மஹாலில் இன்றும், நாளையும் (ஏப்.,6, 7) நடக்கிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் எந்த கல்லுாரியில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கருத்தரங்குகள், கண்காட்சி இடம் பெறும்.கண்காட்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் ஒரே கூரையின் கீழ் 44 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணி முதல் இரவு 6.30 மணி வரை மாணவர்கள், பெற்றோர் கண்காட்சியை பார்வையிடலாம். வேலைவாய்ப்புக்கு ஏற்ற படிப்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் நடக்கும் கருத்தரங்குகளில், 15 வல்லுநர்கள் காலை 10.00 முதல் 11.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரையும் பேசுகின்றனர். கருத்தரங்கில் இன்று பேசுபவர்கள்: இன்று, சிவில் சர்வீசஸ் தொடர்பாக விஜய்கார்த்திகேயன், மின்னணு அறிவியல் படிப்பு குறித்து சுந்தரராஜன், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் ஏ.சி.எஸ்., படிப்பு தொடர்பாக சரவணபிரசாத், அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிப்பு பற்றி திருநாவுக்கரசு, கடல்சார் விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம் பற்றி சுரேஷ்குமார், வேலைபெற தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்வது எப்படி என்பது குறித்து சுஜித்குமார், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் தொடர்பாக ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர் பேசுகின்றனர். முக்கிய படிப்புகள் குறித்த சந்தேகங்களுக்கும் வல்லுநர்கள் பதில் அளிக்கின்றனர். கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு டேப்லட்கள் மற்றும் வாட்சுகள் பரிசாக வழங்கப்படும். அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை பல ஆலோசனைகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படும். பங்கேற்கும் மாணவர்களுக்கு எந்த கல்லுாரியில் என்ன படிப்பு உள்ளது என்பது பற்றிய முழுமையான வழிகாட்டி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். நிகழ்ச்சியை பாரத் பல்கலை இணைந்து வழங்குகிறது. பவர்டு பை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள். கோ ஸ்பான்சர்கள் நேரு குழுமக் கல்வி நிறுவனங்கள். அனுமதி இலவசம். கேன்டீன் வசதி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்