உள்ளூர் செய்திகள்

காருண்யா பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: காருண்யா பல்கலை மற்றும் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் பால் அப்பாசாமி பேசுகையில், “இந்த ஒப்பந்தத்தில் மூலம் தொழிற்சாலையின் தேவைகளை மாணவர்கள் அறிந்து, அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்,” என்றார். பல்கலை பதிவாளர் ஆனிமேரி, பில்டர்ஸ் அசோசியேஷன் சேர்மன் சேகர், பேராசிரியர் தேவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்