நாளந்தா பல்கலை மன்மோகன் மகிழ்ச்சி
தாய்லாந்தில் நடந்த கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது பீகார் மாநிலத்தில் உள்ள பழமை வாய்ந்த நாளந்தா பல்கலையை, சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மாற்றுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கு கிழக்கு ஆசிய நாடுகள் பெரிய அளவில் உதவி செய்து வருகின்றனர். இதற்காக, அந்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவரும் கல்வித் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு, இந்த பல்கலை, ஒரு சிறப்பான முன் உதாரணமாக விளங்கும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.