உள்ளூர் செய்திகள்

திருத்தணியில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

"தினமலர்&' மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து, திருத்தணியில் நேற்று நடத்திய, "ஜெயித்துக் காட்டுவோம்&' நிகழ்ச்சியில் ஆர்.கே.பேட்டை, பொதட்டூர் பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்."தினமலர்&' நாளிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் வகையில், "ஜெயித்துக் காட்டுவோம்&' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த 14 ஆண்டுகளாக நடக்கும் இந்நிகழ்ச்சி, திருத்தணியில் நான்காவது முறையாக திருத்தணி எஸ்.எஸ்.மகால் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை பத்தாம் வகுப்பிற்கும், பிற்பகல் 12ம் வகுப்பிற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, பொதட்டூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நள்ளிரவு முதல் மாணவ, மாணவியர் வந்தனர். அதிகாலைப் பனியையும் பொருட்படுத்தாமல் மண்டப வாசலில் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்தனர். மாணவர்கள் அனைவருக்கும், "ஜெயித்துக் காட்டுவோம்&' குறித்த முழு வழிகாட்டி புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள் மற்றும் புளு பிரின்ட், உடல் நலம் காப்பது குறித்த புத்தகம், குறிப்பு எழுத நோட்டு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு குறித்த பயம் நீங்கி அதிக மதிப்பெண் பெற கணித ஆசிரியர் மோகன்தாஸ், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆசிரியர் ஆனந்தன், தமிழாசிரியர் ராஜகோபால் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் யுவராஜ் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். மதியம் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி முடிந்தது. பிற்பகல் 12.30 மணிக்கு பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி துவங்கியது. இதில், இயற்பியல் ஆசிரியர் கோபி ஆனந்தன், வேதியியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், கணித ஆசிரியர் ரமேஷ், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆசிரியர் சேகர் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். வணிகவியல் ஆசிரியர் சீனிவாசன், பொருளியல் ஆசிரியர் ரவி,  வணிகக் கணித மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆசிரியர் ரமேஷ், கணக்குப் பதிவியல் ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற குறிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியை, "தினமலர்&' நாளிதழுடன் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம், தண்டலம் ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரி, கவரைப்பேட்டை டி.ஜே.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி, அரக்கோணம் கிருஷ்ணா கல்வி நிறுவனம், திருத்தணி பி.கே.ஆர்., கல்வி நிறுவனம், திருத்தணி ஜெய்ஸ்ரீ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்