மாணவர்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது திருவள்ளூர்
தினமலர் நாளிதழ் ஏழாவது ஆண்டாக திருவள்ளூரில் ஜெயித்துக் காட்டுவோம்&' நிகழ்ச்சியை நடத்தியது. காலையில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், பிற்பகல் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும் நிகழ்ச்சி நடந்தது.காலை 8 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சிக்கு, அதிகாலை 3 மணியில் இருந்து மாணவ, மாணவியர் குவியத் துவங்கினர். அருகில் உள்ள மணவாளநகரில் இருந்து வெகு தூரத்தில் உள்ள பெரியபாளையம், வெங்கல், மணவூர், பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருமழிசை பகுதிகளிலிருந்து, பஸ்களிலும், ரயில்களிலும் மாணவ, மாணவியர் திரண்டு வந்தனர்.பிற்பகல் பிளஸ் 2 மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய மாணவ, மாணவியர் கூட்டத்தால் திருவள்ளூர் நகரமே திக்குமுக்காடியது. அந்தளவிற்கு மாணவ, மாணவியர் ஆர்வமாக கலந்து கொண்டு ஜெயித்துக் காட்டுவோம் என்ற உறுதியுடன் திரும்பிச் சென்றனர்.