கல்லுாரி வகுப்புகள் துவக்க விழா
திருபுவனை; கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்.சி., போஸ்ட் பேசிக், பி.எஸ்.சி., - எம்.எஸ்.சி., செவிலியருக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவிற்கு கல்வி நிறுவனத்தின் தலைவர் தனசேகரன் விழாவை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் கல்லுாரியின் முதல்வர் தனுசு வரவேற்றார். இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் கிரீட்டாகுணசீலன், துணை செவிலியர் கண்காணிப்பாளர் டெஸ்ஸிகிலாரி, மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்கண், பதிவாளர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றனர்.நிறுவன மேலாண் இயக்குனர் தனசேகரன் பங்கேற்று, புதுச்சேரி பல்கலைக்கழக அளவில் 2015-2018 கல்வியாண்டில் இளநிலை படிப்பில் முதலிடம் பிடித்த மாணவி சித்ரா, 2017-2019ம் கல்வியாண்டு முதுநிலை படிப்பில் முதலிடம் பிடித்த மாணவி ரஞ்சிதா ஆகியோருக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். பேராசிரியர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.