உள்ளூர் செய்திகள்

சிறப்பாசிரியர் பணி தேர்வு அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், சிறப்பு பாடங்களான, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகியவற்றில், சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், 1,598 காலியிடங்கள் மற்றும் பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 27ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான, &'ஆன்லைன்&' விண்ணப்ப பதிவு, மார்ச், 31ல் துவங்கும். ஏப்., 25 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள், தேர்வு விதிகள் போன்றவற்றை, trb.tn.nic.in/என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்