மருத்துவ கல்லுாரி டீன்கள் நியமனம்
சென்னை: தமிழகத்தின், ஐந்து மருத்துவ கல்லுாரிகளுக்கு, புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.மருத்துவ கல்லுாரி பேராசிரியர்களாக இருந்த, ஐந்து பேர், முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்னர். அதில், பேராசிரியர் ரவிக்குமார், தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர்கள் உஷா - கள்ளக்குறிச்சி, அமுதவள்ளி - தர்மபுரி, ஜோசப் ராஜ் - திருவாரூர், மனோஹரி - ஊட்டி மருத்துவ கல்லுாரிகளுக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்.