உள்ளூர் செய்திகள்

செஞ்சியில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி்!

தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தன்னம் பிக்கையுடன் தேர்வு எழுதுவதற்கான ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வீராசாமி திருமண மண்டபத்தில்  நடந்தது.செஞ்சியில் அதிகாலை முதல் மழை கொட்டியது. இந்த மழையை பொருட்படுத்தாமல் காலை 6.20 முதல் மாணவ, மாணவிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் (தமிழ்), கெடார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குழந்தை ராஜ் (ஆங்கிலம்), பண்டசோழநல்லூர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் பசுபதிராஜன் (அறிவியல்), வீராம்பட்டினம் சிங்காரவேலர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவராஜ் (சமூக அறிவியல்), தவளக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கருணாகரன் (கணிதம்) பாடங்கள் குறித்து கருத்துரை வழங்கினர்.மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எழுதவும், திட்டமிட்டு அதிக மதிப்பெண் பெறுவதற் கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளித்தவர்களுக்கு செஞ்சி கன்னிகா டெலிகாம் ரமேஷ் பாபு காந்தியடிகளின் சத்தியசோதனை புத்தகத்தை பரிசாக வழங்கினார்.இதில் தேர்வு செய்யப் பட்ட ஐந்து  மாணவர் களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பிறகு ஆறு மாதங்களுக்கு செஞ்சி எஸ்.ஆர்.எம்., இன்போடெக் கம்ப்யூட்டர் நிறுவனம் மூலம் டி.எஸ்.ஏ., கணினி பயிற்சியை இலவசமாக வழங் குவதாக  கிளை மேலாளர் ஷாஜகான் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்