மதுரை, சென்னை பல்கலைகள் ஒப்பந்தம்
சென்னைப் பல்கலைக்கழகமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில் ஜனவரி 15ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இரண்டு பல்கலைக்கழகங்களிலும் உள்ள பொதுவான வசதிகள் ஆய்வுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஒப்பந்தத்தினால் ஆய்வகங்களை அமைப்பதற்கான முதலீட்டு அளவு கணிசமாகக் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.