முனைவர் பட்டம் வழங்கினார் கவர்னர்
விழுப்புரம்: திருநாவலுார் ஜோசப்கல்லுாரி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை தமிழக கவர்னர் ரவி வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் ஜோசப் கல்லுாரி கடந்த 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இளங்கலை பட்டம் மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளை நடத்தி வருகிறது. 13 இளநிலை பாடப் பிரிவுகளும், 7 முதுநிலை பாடப் பிரிவுகளும் உள்ளது. ஆராய்ச்சி பாடப் பிரிவில் கணினி துறை, வணிகவியல், ஆங்கிலம், தமிழ், கணிதம், துறைகள் உள்ளன. இதில் ஆராய்ச்சி பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற 7 பேருக்கு, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பட்டம் வழங்கினார். கணினி துறையில் சொக்கலிங்கம், சுதாகர், ஆங்கிலத் துறையில் மணிகண்டன், வணிகவியல் துறையில் யாதவ் பரத்சிங், லீமா ரோஸ், கீதா, வின்ஸ்லின் ஆகியோர் பட்டம் பெற்றனர்.