ஹிந்தி ஆன்லைன் படிப்புகள் அறிமுகம்
சென்னை ஹிந்தி பிரசார சபாவின் பொது செயலர் ஜி.செல்வராஜன் கூறியதாவது: ஹிந்தி பிரசார சபா சார்பில், தினமும் இரண்டு பிரிவுகளாக ஆன்லைனில் பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் மாணவர்கள், இல்லத்தரசிகள், பணியில் உள்ளவர்கள் என, அனைவரும் சேர்ந்து படிக்கலாம்.ஆன்லைன் வழி பாடங்களை படித்த பின், அவர்களுக்கு சந்தேகம் தீர்க்கவும் ஆசிரியர்களை நியமித்துள்ளோம். சான்றிதழும் வழங்கப்படும்.அதேபோல், பிராத்மிக் முதல் பிரவீன்சான்றிதழ் படிப்பு வரை, ஆசிரியர்களிடம் படிக்க வாய்ப்பில்லாதவர்கள், தாங்களே சொந்தமாக புத்தகம் வாங்கி படிக்கலாம். அவர்கள் தனி தேர்வர்களாக ஆன்லைன் வழியே விண்ணப்பித்து தேர்வு எழுதலாம். இதற்கு யாருடைய பரிந்துரையும் தேவை இல்லை. இதற்காக, தென்னிந்திய ஹிந்தி பிரசார சபாவின், www.dbhpscentral.org/latindex.php என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தனி தேர்வர்களாக படிப்பவர்களுக்கு, புத்தகங்கள் பதிவு தபால் வழியில் அனுப்பப்படும். இதற்கு இணையத்தின் வழியே, தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தாங்கள் விரும்பும் ஊர்களில் தேர்வு மையம் ஒதுக்கவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.விரைவில் பட்டமளிப்பு விழாபிரவீன் என்ற சான்றிதழ் படிப்பு வரை தேர்ச்சி பெறுவோருக்கு, ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். 2020ம் ஆண்டு, கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால், 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. தென்னிந்திய ஹிந்தி பிரசார சபாவின் செயற்குழு கூட்டம், சபாவின் தலைவரும், வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான முரளிதரன் தலைமையில், ஒரு வாரம் முன் ஹைதராபாதில் நடந்தது. இதில், அக்டோபர் அல்லது நவம்பருக்குள் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சபா அதிகாரிகள் தெரிவித்தனர்.