உள்ளூர் செய்திகள்

ஆறு நூல்கள் வெளியீட்டு விழா

குளித்தலை: குளித்தலையில், ஆறு நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது.கிராமியம் இயக்குனர் டாக்டர் நாராயணன் தலைமை வகித்தார். பேராசிரியர் பத்மபிரியா வரவேற்றார். முனைவர் நாவை சிவம், பைந்தமிழ் இயக்கம் இயக்குனர் தமிழாழன், தமிழுறவு பெருமன்றம் அழகரசன், கரூர் அரிமா சங்கம் தலைவர் வையாபுரி, தமிழ்ப்பேரவை பொருளாளர் ஆண்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் டி.எஸ்.பி., இராசன் சிறப்பாளராக பங்கேற்றார். இந்நிகழ்வில் வெண்பா ஐநுாறு, பாட்டுத்தென்றல், புதுக்கவிதை பூங்கா, ஆசிரியம் நுாறு, கிராமியத் தென்றல் விருந்து, தாய்ப்பத்து ஆகிய ஆறு நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது. நல்லாசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்