உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் வாயிலாக துாய்மை பணி

சென்னை: பள்ளி மாணவர்கள் வாயிலாக, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில், ஸ்ட்ரீஸ்ஸ்கேப் - பை தி லிட்டில் லார்ட்ஸ் என்ற திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.சென்னை ஆர்.சி.எம். - மெட்ராஸ் ரோட்டரி கிளப் சார்பில், 10 பள்ளி மாணவர்களை இணைத்து, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்கும் வகையில், ஸ்ட்ரீட்ஸ்கேப் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், சென்னை, தி.நகர் வேளாங்கன்னி பள்ளியில், நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக, பள்ளியைச் சுற்றியுள்ள 984 அடி சுற்றுப்புறத்தை, பள்ளி மாணவர்கள் தினசரி துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக மாணவர்களுக்கு கையுறை, இரண்டு தனித்தனி குப்பை தொட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்