உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தை ஒட்டி, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவில் இன்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். பாஸ்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தேரோட்டத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதஷ்னி பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்