உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு பட்டங்கள்: யு.ஜி.சி., கட்டுப்பாடு

வெளிநாட்டு பட்டங்கள் குறித்த புதிய வழிகாட்டு வழிமுறைகளை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு உருவாக்கியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, இங்கு அதற்கு இணையான பட்டம் வழங்குவது, அல்லது அந்தப் பட்டங்களுக்கு இங்கு அங்கீகாரம் அளிப்பதற்கான புதிய வரைவு வழிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆன்லைன் வாயிலாக அல்லது தபால் வாயிலாக, வெளிநாட்டு பல்கலைகளில் படித்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது.இதைத் தவிர, பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு அதற்கு இணையான தகுதிகள் இங்கு வழங்குவது குறித்தும் வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டு வழிமுறைகள் குறித்து, செப்., 16ம் தேதி வரை, யு.ஜி.சி., இணையதளத்தில் கருத்து தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்