உள்ளூர் செய்திகள்

சட்ட பல்கலையில் சுற்றுலா கருத்தரங்கு

சென்னை: ஜி - 20 மாநாட்டையொட்டி, அம்பேத்கர் அரசு சட்டப் பல்கலையில், சுற்றுலா குறித்த கருத்தரங்கு துவங்கியது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்தியாவில் நடக்கவுள்ள, ஜி - 20 மாநாட்டையொட்டி, சுற்றுலா குறித்த கருத்தரங்கு மற்றும் விவாதம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில் நேற்று முன்தினம் துவங்கியது. நிகழ்வில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அரசின் சட்ட விவகாரத் துறை செயலர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 300 மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.கருத்தரங்கின் நிறைவு விழா இன்று நடக்கிறது. இதில், தமிழக கவர்னர் ரவி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். தென் மாநிலங்களுக்கான ராணுவ அதிகாரி கரண்பீர் சிங் பிரார், தென் மாநில ராணுவ பிரிவின் பணியாளர் தலைவர் மேஜர் ஜெனரல் இந்திர பாலன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்