உள்ளூர் செய்திகள்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழகம் முழுவதும் மூன்றாம் நபர் ஆய்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புதிதாக கடந்த கல்வியாண்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மூன்றாண்டு செயல்திட்டத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவர்களை கொண்டு மூன்றாம் நபர் ஆய்வு குழு அமைக்கப்படுவதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்