உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு நுண்ணறிவு தேர்வு

திருப்போரூர்: திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் நடைபெறும் நுண்ணறிவுத் தேர்வு மற்றும் பயிற்சி நேற்று துவங்கியது.இதில், சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளி தேர்வு மற்றும் பயிற்சியை துவக்கி வைத்தார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 அரசு பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் ௧ படிக்கும், 250 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்