உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு பராமரிப்பு தொகை

புதுச்சேரி: ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் பராமரிப்பு தொகை பெறுவதற்கான தகவல்களை அளிக்கும்படி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தினால் பள்ளியில் ஆண்டிற்கு 7,600 மாணவர்களும்,கல்லுாரி,பல்கலைக்கழகங்களில் 2,500 மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.ஆண்டிற்கு 30 கோடி ரூபாய் கல்வி உதவி திட்டத்திற்கு புதுச்சேரி அரசு செலவிட்டு வருகின்றது.தற்போது,தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர்,பழங்குடி பிளஸ்1,பிளஸ்2 மாணவர்களுக்கு பராமரிப்பு செலவாக தலா 1000 ரூபாய் வீதம்,பத்து மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கின்றது.அதே வேளையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த பராமரிப்பு செலவும் வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து,அரசு பள்ளி மாணவர்களுக்கு பராமரிப்பு செலவாக 1000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளார்.இந்தாண்டே இந்த உத்தரவு அமலுக்கு வர உள்ளது.இதனையடுத்து அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ்1,பிளஸ்2 படிக்கும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மாணவர்கள் பற்றிய விபரங்களை பள்ளி கல்வித் துறை கேட்டுள்ளது.மாணவர்கள் பராமரிப்பு தொகை பெறுவதற்காக அடுத்த மாதம் 10 ம்தேதிக்குள் தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும்சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்