உள்ளூர் செய்திகள்

துன்பத்தை இன்பமாக மாற்றுவதே அறிவு

தேவகோட்டை: இன்றைய கால கட்டத்தில் வரும் துன்பத்தை இன்பமாக மாற்றுவதை தான் சிறந்த அறிவாக கருத வேண்டும் என தேவகோட்டையில் பொன்னம்பல அடிகள் பேசினார்.தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் நிறுவனர் நாள் விழா நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் லட்சுமணன், துணை தலைவர் சேவுகன், செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். பொருளாளர் அண்ணாமலை வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், பிச்சை குருக்கள் பங்கேற்றனர்.துன்பத்தை மாற்றுவதே அறிவுபொன்னம்பல அடிகள் பேசியதாவது, இங்கு கல்லுாரி துவக்காவிட்டால், உயர்கல்வியை ஏராளமானவர்கள் எட்டியிருக்க மாட்டார்கள். வீடு வீடாக நாளிதழ் போடும் பணியை செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், அவரது கடின உழைப்பு, கல்வியால் நாள் தோறும் செய்திதாள்களில் முக்கிய இடம் பிடித்திருந்தார். துன்பத்தை இன்பமாக மாற்றுவது தான் அறிவு. மனிதன் கருத்தால் நடக்க வேண்டும்.நடிகர்களை இன்றைய இளைஞர்கள் ரோல்மாடலாக எடுக்காமல், மனித நேய மிக்கவர் அப்துல்கலாம் போன்றவர்களை எடுக்க வேண்டும், என்றார். கல்வி உறுப்பினர் சேவுகன் அண்ணாமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்