உள்ளூர் செய்திகள்

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

உடுமலை: விடுமுறை முடிந்து மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் துவக்கப்படுவதால், பள்ளிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.உடுமலை சுற்றுப்பகுதியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அரையாண்டுத்தேர்வுகள், டிச., 22ம் தேதி முதல் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.மாணவர்களுக்கான நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பத்து நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்ததால், பள்ளிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், வகுப்பறைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதி, மின்சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரிபார்த்துக்கொள்ளவும், கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்